செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விடாமுயற்சிக்கு அர்த்தம் என்ன என்பதை சுனிதா வில்லியம்ஸ் குழு மீண்டும் நிரூபித்துள்ளது - பிரதமர் மோடி

12:24 PM Mar 19, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

விடாமுயற்சிக்கு அர்த்தம் என்ன என்பதை சுனிதா வில்லியம்ஸ் குழு மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சுனிதா வில்லியம்ஸ் குழுவை பூமி  மிஸ் செய்ததாக தெரிவித்துள்ளார். அவர்களின் மன உறுதி, தைரியம் மற்றும் எல்லையற்ற மனித மனப்பான்மைக்கு ஒரு சோதனையாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

விடாமுயற்சிக்கு அர்த்தம் என்ன என்பதை சுனிதா வில்லியம்ஸ் குழு மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

அறியப்படாத பரந்த உலகில் அவர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு என்றென்றும் மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விண்வெளி ஆய்வு என்பது மனித ஆற்றலின் வரம்புகளைத் தாண்டிச் செல்வது, கனவு காணத் துணிவது மற்றும் அந்தக் கனவுகளை நிஜமாக மாற்றும் தைரியத்தைக் கொண்டிருப்பது பற்றியது என்றும்,  சுனிதா வில்லியம்ஸ், தனது வாழ்க்கை முழுவதும் இந்த உணர்வை வெளிப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

அவர்களின் பாதுகாப்பான வருகையை உறுதிசெய்ய அயராது உழைத்த அனைவரையும் நினைத்து நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறோம். என்றும், துல்லியம் ஆர்வத்தையும் தொழில்நுட்பம் விடாமுயற்சியையும் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement
Tags :
#Crew9#Crew9 astronautsFEATUREDMAINPM Modisunita williamsSunita Williams returnsWelcome back
Advertisement