செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விடுதலைக்கு அயராது பாடுபட்ட நேதாஜியின் தியாகங்களைப் போற்றி வணங்குவோம் - எல்.முருகன் புகழாரம்!

09:33 AM Jan 23, 2025 IST | Sivasubramanian P

விடுதலைக்கு அயராது பாடுபட்ட நேதாஜியின் தியாகங்களைப் போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டமைத்து போராடியவருமான நேதாஜிசுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று என தெரிவித்துள்ளார்.

தேசத்தை அன்னியர்களின் கைகளில் இருந்து மீட்டெடுக்கும் வகையில், இந்திய இளைஞர்களை உத்வேகப்படுத்திய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தனது வீர உரைகளின் மூலமாகவும், செயல்பாடுகள் மூலமாகவும் சுதந்திரப் போரில் ஈடுபட்டதாகவும் அவர் கூறிள்ளார்.

Advertisement

தன்னலமற்ற தியாகியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, இந்திய விடுதலைக்கு அயராது பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் வீர தீர தியாகங்களைப் போற்றி வணங்குவோம் என்றும் எல்.முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement
Tags :
bjp l murugandr l muruganFEATUREDL Muruganl murugan bjpl murugan greetingsl murugan latestl murugan mpl murugan oathMAINmos l muruganNetaji Subhas Chandra Bose birth anniversary
Advertisement
Next Article