விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ராக்கெட்!
03:01 PM May 30, 2024 IST | Murugesan M
சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் அக்னிபான் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ நிறுவனம், அக்னிபான் என்ற பெயரில், ராக்கெட்டுகளை செலுத்துவதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
Advertisement
இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முயற்சி தொழில் நுட்ப்க்கோளாறு காரணமாக 4 முறை கைவிடப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து அக்னிபான் (SOrTeD) ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
Advertisement
இந்தியாவிலே முதல் முறையாக இந்நிறுவனம் செமி கிரையோஜெனிக் இன்ஜினை பயன்படுத்தியுள்ளது. அக்னிபான் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Advertisement