செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விண்வெளியில் பறந்தாலும் அதே சம்பளம் தான் - சுனிதா வில்லியம்ஸ், வில்மோரின் ஊதிய விவரம்!

09:59 AM Mar 20, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 9 மாதங்கள் கழித்து பூமிக்குத் திரும்பிய நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரின் ஊதிய விவரம் வெளியாகியுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட முன்னாள் விண்வெளி வீரர் கேடிகால்மன், பொதுவாக விண்வெளி மையத்தில் திட்டமிட்ட நாட்களை விட கூடுதலாக தங்குபவர்களுக்கு நாளொன்றுக்கு தலா 4 டாலர் வீதம் ஊதியம் வழங்கப்படும் என்றும்,  அவர்களும், சக அமெரிக்க அரசுப் பணியாளர்களைப் போலவே நடத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், சுனிதா வில்லியம்சும் வில்மோரும் தங்களது ஊதியத்தைக் காட்டிலும் கூடுதலாக தலா ஆயிரம் டாலர் பெறுவார்கள் என கேடிகால்மன் தெரிவித்துள்ளார்.

Advertisement

அதன்படி சுனிதா வில்லியம்ஸ் 1 லட்சத்து 25 ஆயிரத்து 133 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1 கோடியே 8 லட்சம் ரூபாயும், அவருடன் விண்வெளியில் தங்கியிருந்த வில்மோருக்கு 1 லட்சத்து 62 ஆயிரத்து 672 டாலரும், அதாவது இந்திய மதிப்பில் 1 கோடியே 41 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Tags :
Former astronaut Katie ColemanMAINNASA astronauts Sunita WilliamsSunita Williams packageUS government employees.Wilmore package
Advertisement