விமானத்தில் கல்வி சுற்றுலா அழைத்து சென்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு!
10:42 AM Jan 21, 2025 IST | Murugesan M
தென்காசி அருகே மாணவர்களை சென்னைக்கு விமானத்தில் கல்வி சுற்றுலா அழைத்து சென்று வந்த ஆசிரியர்களுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 90-க்கம் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
Advertisement
இதில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 20 பேரை ஆசிரியர்கள் மதுரையிலிருந்து சென்னைக்கு கல்விச் சுற்றுலா அழைத்து சென்றனர்.
தொடர்ந்து சுற்றுலாவை முடித்து, மாணவர்களுடன் ஊர் திரும்பிய ஆசிரியர்களுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Advertisement
Advertisement