விருதுநகர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - இருவர் கைது!
09:14 AM Mar 22, 2025 IST
|
Ramamoorthy S
விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
மல்லாங்கிணறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தார்.
அவர்களிடம் நடத்திய சோதனையில், சாக்லேட் பேப்பரில் மறைத்து கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா வைத்திருந்த வீரமணிகண்டன், முத்துராமன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement