விருதுநகர் - டாஸ்மாக் கடையில் முதல்வரின் படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினர் கைது!
07:46 AM Mar 27, 2025 IST
|
Ramamoorthy S
விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் முதலமைச்சர் புகைப்படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
அவர்கள் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்தார். உடனடியாக பாஜகவினர் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முன்றனர்.
ஆனால், போலீசார் அவரை வெளியே விடாமல் கதவைப் பூட்டிக்கொண்டு விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த பாஜகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement