விருதுநகர் பொருட்காட்சியில் ராட்டினத்தில் இருந்து பெண் தவறி விழுந்த பெண் - மருத்துவமனையில் அனுமதி!
06:41 AM Apr 12, 2025 IST
|
Ramamoorthy S
விருதுநகர் பொருட்காட்சியில் ராட்டினத்தில் இருந்து பெண் தவறி விழுந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
Advertisement
விருதுநகர் - மதுரை சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் 77-வது பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் ஏராளமானோர் வருகை தந்து பொருட்காட்சியை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று அங்கிருந்த ராட்டினத்தில் மக்கள் ஏறி சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது கெளசல்யா என்ற இளம்பெண் ராட்டினத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில், காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில், ராட்டினத்தில் இருந்து பெண் கீழே விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement