செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விழுப்புரத்தில் ரூ. 1.60 கோடி பறிமுதல் - 4 பேர் கைது!

08:15 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை கடத்திச் செல்ல முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

விழுப்புரம் புதிய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் சுதாகர் மற்றும் முருகவேல் ஆகியோர், பேருந்து நிலையத்தினுள் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைகளுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து ரயில் மூலம் விழுப்புரத்திற்கு ஹவாலா பணத்தை கடத்தி வந்ததும், விழுப்புரத்தில் இருந்து பேருந்து மூலம் அந்த பணத்தை திருச்சிக்கு கொண்டு செல்லவிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை தாலுக்கா காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவலர்கள், 4 பேரின் பைகளில் இருந்த ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement

தொடர் விசாரணையில் குருவியாக செயல்பட்டு வந்த 4 பேரும் திருச்சி விரகனேரி பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், சிராஜுதீன், அபுபக்கர் சித்திக் மற்றும் ராஜ்முகமது என்பதும், சென்னை பாரிமுனையில் இருந்து பணத்தை பெற்று வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
MAINtrichyvillupuramRs 1.60 crore seziedhawala money4 person arrested
Advertisement