செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க நாராயணசாமி நாயுடுவே காரணம் - அண்ணாமலை புகழாரம்!

11:52 AM Dec 21, 2024 IST | Murugesan M

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க நாராயணசாமி நாயுடு காரணமாக இருந்தார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "தனது வாழ்நாள் முழுவதும் விவசாய நலனுக்காகவும், விவசாயிகள் நல்வாழ்வுக்கும் வாழ்ந்த நாராயணசாமி நாயுடு  நினைவு தினம் இன்று. தமிழக விவசாயிகள் சங்கத்தை நிறுவி, விவசாயிகளின் வாழ்வுரிமைக்காகப் போராடியவர்.

விவசாயிகளுக்கு இன்று இலவச மின்சாரம் கிடைப்பதற்குக் காரணமானவர். 1950களில், விவசாயத்துக்காக வழங்கப்பட்ட மின்சாரத்தின் அளவு குறைக்கப்பட்டபோதும், 1970களில், திமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டபோதும், விவசாயிகளைத் திரட்டி, போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தவர். ஐயா நாராயணசாமி நாயுடு அவர்கள் புகழைப் போற்றி வணங்குவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
annamalaiFEATUREDMAINnarayanasamy naidu death anniversarytamilnadu bjp president
Advertisement
Next Article