விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசு - அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு!
01:25 PM Jan 31, 2025 IST
|
Sivasubramanian P
திமுக அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சேவை செய்வதற்காக விவசாயிகளை வஞ்சிக்கிறது என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisement
கடலூர் மாவட்டம் வெள்ளகரை ஊராட்சியில் அரசு நிலத்தை மக்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி அதிகாரிகள் முந்திரி பயிர்கள் மற்றும் குடியிருப்புகளை அகற்றினர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமனை நடுவீரப்பட்டு பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தோல் தொழிற்சாலைக்கு நிலங்களை தாரை வார்ப்பதற்காக முன் அறிவிப்பின்றி முந்திரி பயிர்கள் அழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் திமுக அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சேவை செய்வதற்காக விவசாயிகளை வஞ்சிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement