விவசாய சங்கம் உருவாக அடித்தளம் அமைத்தவர் நாராயணசாமி நாயுடு - எல்.முருகன் புகழாரம்!
01:23 PM Dec 21, 2024 IST
|
Murugesan M
விவசாய சங்கம் உருவாக அடித்தளம் அமைத்தவர் நாராயணசாமி நாயுடு மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
Advertisement
தமிழகத்தில் விவசாயிகள் சங்கங்கள் உருவாகிட அடித்தளம் அமைத்தவரும், விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து சிந்தித்தவருமான நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவு தினம் இன்று.
1957 ஆம் ஆண்டிலிருந்தே தன்னை போராட்டக் களங்களில் ஈடுபடுத்திக் கொண்டவர், தேசம் முழுவதும் விவசாயிகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப்பங்கு வகித்தார். இன்றளவும், விவசாயத்திற்கான இலவச மின்சாரம் முதல், வேளாண் பொருட்களுக்கான அடிப்படை விலை நிர்ணயம் வரை, விவசாயிகளுக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொடுத்ததில் ஐயாவின் பங்கு அளப்பரியது.
Advertisement
இப்படியாக, தனது வாழும் காலத்தை விவசாயிகள் பற்றி சிந்திப்பதில் கழித்த, ஐயா நாராயணசாமி நாயுடு அவர்களை பெருமையுடன் நினைவு கூர்வோம்.
Advertisement
Next Article