விவசாய பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்த பிரதமர் - எல்.முருகன் பேச்சு!
விவசாயம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Advertisement
தேனி மாவட்டம் சின்னமனூரில் பெண் தொழில் முனைவோருக்கான உற்பத்தி மற்றும் பயிற்சி மையம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், கட்டடத்தை திறந்துவைத்து பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட விவசாய பொருட்களை பார்வையிட்டார்.
தொடர்ந்து அங்கிருந்த பெண்களுடன் உரையாடி நலத்திட்ட உதவிகளை எல்.முருகன் வழங்கினார். நிகழ்ச்சி மேடையில் பேசிய எல்.முருகன், விவசாய பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்க பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக கூறினார்.
மேலும் விவசாயிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் ஆண்டிப்பட்டி முதல் அமெரிக்கா வரை செல்கிறது என கூறிய எல்.முருகன், 2047ஆம் ஆண்டு இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ந்திருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு எனவும் தெரிவித்தார்.