செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விவாகரத்து கோரிய வழக்கு : ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆஜராக உத்தரவு!

11:49 AM Apr 05, 2025 IST | Murugesan M

விவாகரத்து கோரிய வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர் செப்டம்பர் 25-ம் தேதி ஆஜராகச் சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி ஆகிய இருவரும் கடந்த 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணமும் செய்து கொண்டனர்.

12 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிவதாகக் கடந்தாண்டு அறிவித்தனர். இதையடுத்து பரஸ்பர விவாகரத்து கோரி ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகிய இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

Advertisement

இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இருவரும் பரஸ்பரம் விவகாரத்துக் கோரி இருப்பதால் 6 மாதம் கால அவகாசம் அளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

அத்துடன் செப்டம்பர் 25-ஆம் தேதி ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆஜராக உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

Advertisement
Tags :
cinemam newsDivorce case: G.V. PrakashMAINSainthavi ordered to appear!சைந்தவிஜி.வி.பிரகாஷ்
Advertisement
Next Article