விவாதங்களை எழுப்பியுள்ள சைஃப் அலிகானின் மருத்துவ காப்பீடு!
நடிகர் சைஃப் அலிகானின் சிகிச்சைக்காக, மருத்துவக் காப்பீடு விரைவாக அங்கீகரிக்கப்பட்ட விவகாரம் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்காக, மருத்துவ காப்பீட்டு வழங்குநரான Niva Bupa நிறுவனம் ஒப்புதல் வழங்கிய ஆவணங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
சைஃப் அலிகானின் குடும்பத்தினர், 36 லட்சம் ரூபாய் ரொக்கமில்லா சிகிச்சைக்காக கோரிக்கை விடுத்த நிலையில், அதில் 25 லட்சம் ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, காப்பீட்டு ஒழுங்குமுறை நிறுவனமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ.க்கு மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். சாதாரண காப்பீடு தாரர்கள் ரொக்கமில்லா சிகிச்சைக்காக போராடும் நிலையில், பிரபலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது போல் தெரிவதாக, மருத்துவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த முறை, ஏற்றத்தாழ்வை உருவாக்குவதாகவும், காப்பீடு என்பது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்றும், மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.