விஷம் கொடுத்து காதலன் கொலை : காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை!
12:18 PM Jan 20, 2025 IST | Murugesan M
கேரள மாநிலத்தை உலுக்கிய விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விஷம் கொடுத்து காதலன் ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த கிரீஷ்மா மற்றும் அவரது உறவினர் ஆகியோர் குற்றவாளிகள் என்றும், கிரீஷ்மாவின் தாய்க்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்தும் விசாரணை நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது.
Advertisement
இந்த நிலையில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருக்கும் இருவருக்குமான தண்டனை விவரத்தை நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. அதில், முக்கிய குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனையும், உறவினருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement