செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விஸ்வகர்மா திட்டத்தை எதிர்ப்பது மதியீனத்தின் உச்சம் - அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பால குருசாமி

03:07 PM Nov 29, 2024 IST | Murugesan M

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்ப்பது மதியீனத்தின் உச்சம் என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியை எதிர்ப்பதை மட்டுமே குறியாக கொண்டு தமிழக அரசு இந்த திட்டத்தை எதிர்த்து வருவதாக விமர்சித்துள்ளார்.

விஸ்வகர்மா திட்டத்தால் நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமான கைவினை கலைஞர்கள் பயன்பெறுவர் என குறிப்பிட்டுள்ள அவர், இத்திட்டம் தமிழகத்திலுள்ள பல லட்சம் பேரின் வாழ்வில் ஒளி ஏற்றும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த திட்டத்தையும் 1950ம் ஆண்டு ராஜாஜி அறிமுகம் செய்த தொழிற்கல்வி திட்டத்தையும் ஒப்பிடுவது கேலிக்குரியது என தெரிவித்துள்ள பாலகுருசாமி, விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வித் திட்டத்தை ஊக்குவிக்கும் என்று கூறுவதும், சமூகநீதிக்கு எதிரானது என கூறுவதும் மதியீனத்தின் உச்சம் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் முடிவால் மாநிலத்தில் கைவினை கலைஞர்களுக்கு கிடைக்கும் பலன்கள் மறுக்கப்படும் எனவும் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
balagurusamy condemnFormer Vice Chancellor of Anna UniversityMAINtamil nadu governmentVishwakarma scheme
Advertisement
Next Article