செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வீட்டில் திருட சென்ற நபரை கையும் களவுமாக கைது செய்த போலீசார்!

03:28 PM Apr 07, 2025 IST | Murugesan M

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் வீட்டில் திருடச் சென்ற நபரைப் போலீசார் கையும் களவுமாகக் கைது செய்தனர்.

Advertisement

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மர்மநபர் திருடச் சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக ரோந்து பணி சென்ற போலீசார், வீட்டிலிருந்து சத்தம் வருவதை அறிந்து அருகில் சென்று பார்த்துள்ளனர்.

போலீசார் வந்ததும் வீட்டை உள்பக்கமாகப் பூட்டி கொண்டு மர்மநபர் போக்கு காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு இரும்பு கேட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் மர்மநபரை கைது செய்தனர்.

Advertisement

வீட்டின் உரிமையாளர் சொந்த ஊர் சென்ற நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், பாலமுருகன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதை அறிந்த போலீசார், அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Tags :
MAINPolice arrest man red-handed for stealing from house!சென்னை முகப்பேர் கிழக்கு
Advertisement
Next Article