வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை : மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறை!
11:28 AM Apr 04, 2025 IST
|
Murugesan M
பெங்களூரில் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.
Advertisement
ஜிகானி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். காலை 8 மணியளவில் இவரது வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி கதவைப் பூட்டினார். தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடித்தனர்.
Advertisement
Advertisement