வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்! - விவசாயிகள் வேதனை
02:20 PM Dec 17, 2024 IST | Murugesan M
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்துவருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் வீணாக கடலில் கலப்பதால், வெயில் காலங்களில் வறட்சி ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
Advertisement
மேலும், வறண்ட தென் மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement