செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வீரத்தின் விளைநிலம் மாவீரர் நேதாஜி புகழைப் போற்றி வணங்குவோம் - அண்ணாமலை புகழாரம்!

09:28 AM Jan 23, 2025 IST | Sivasubramanian P

வீரத்தின் விளைநிலம் மாவீரர் நேதாஜி புகழைப் போற்றி வணங்குவோம் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைத்து, ஆங்கிலேய அரசுக்கு எதிராக, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் பிறந்த தினம் இன்று என்றும்,  தமது பேச்சாலும், எழுத்துக்களாலும், செயல்பாடுகளாலும், எண்ணற்ற இளைஞர்களைச் சுதந்திரப் போரில் ஈடுபடச் செய்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

எந்தச் சூழ்நிலையிலும், ஆங்கிலேய அரசுக்கு அடிபணியாமல், நிபந்தனையற்ற தேசவிடுதலையே நோக்கமாகக் கொண்டிருந்தவர் என்றும்,  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய மக்களின் பேரன்பைப் பெற்றவர் என்றும் அவர் கூறியுள்ளார். வீரத்தின் விளைநிலம் மாவீரர் நேதாஜி அவர்கள் புகழைப் போற்றி வணங்குவோம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
annamalai greetingsbirth anniversary.FEATUREDIndian National ArmyMAINNetaji Subhas Chandra boseTamilnadu BJP State President Annamalai
Advertisement
Next Article