வெங்காயம் மீதான 20 % ஏற்றுமதி வரி ரத்து - மத்திய அரசு அறிவிப்பு!
12:18 PM Mar 23, 2025 IST
|
Ramamoorthy S
விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயத்தின் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது,
Advertisement
வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது. அரசின் இந்த முடிவால் வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்ததுடன் வெங்காய ஏற்றுமதியும் அதிகரித்தது.
இந்தநிலையில் பல மாநிலங்களில் வெங்காயம் விலை சரிந்துள்ளதால் அதன் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Advertisement
வெங்காய விலை தேசிய சராசரியில் 39 சதவீதமும், சில்லறை விலையில் 10 சதவீதமும் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், ஏற்றுமதி வரி ரத்து அறிவிப்பு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Advertisement