வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு!
04:49 PM Dec 04, 2024 IST
|
Murugesan M
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 16 குழிகள் தோண்டப்பட்ட நிலையில், சுடுமண் உருவ பொம்மைகள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், தங்கமணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், இது தொடர்பாக பேசிய அகழாய்வு இயக்குனர் பாஸ்கர், இங்கு தொழில்கள் நடைபெற்றதற்கு சான்றாக பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளதாக கூறினார்.
Advertisement
மேலும், இந்த 3ம் கட்ட அகழாய்வில் இதுவரை 2 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement
Next Article