செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வெம்பக்கோட்டை அகழாய்வு - 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்கள் கண்டெடுப்பு!

06:50 PM Nov 08, 2024 IST | Murugesan M

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற 3-ஆம் கட்ட அகழாய்வில் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்கள் கண்டெடுக்கப்பட்டன.

Advertisement

வெம்பக்கோட்டை அடுத்த விஜயகரிசல்குளம் பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்பு காசுகள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற அகழாய்வின்போது சுமார் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஜாஸ்பர், சார்ட் என்ற கற்கள் கண்டெடுக்கப்பட்டன.

Advertisement

கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய கருவிகளை தயாரிக்க இவ்வகை கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
MAINVirudhunagarVembakottaiVembakottai excavation6 thousand years old stones
Advertisement
Next Article