வெற்று காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே திமுக அரசின் பட்ஜெட் அறிவிப்பு என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் விளம்பர மாடல் அரசின் கடந்தகால வெற்று அறிவிப்புகளே என விமர்சித்துள்ள விஜய், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அறிவித்த அரசு, அதை எப்போது வழங்கும் என அறிவித்ததா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பரந்தூர் விமான நிலையப் பணிகள் விரைவுப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு விவசாய மக்களுக்கு செய்யப்படும் துரோகம் என தெரிவித்துள்ள விஜய், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம், பணி நிரந்தரம் உள்ளிட்ட எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், வெற்று காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே திமுக அரசின் பட்ஜெட் அறிவிப்பு எனவும் தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.