வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு - ஜவாஹிருல்லாவின் ஓராண்டு சிறையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!
01:00 PM Mar 14, 2025 IST
|
Ramamoorthy S
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் ஜவாஹிருல்லாவின் ஓராண்டு சிறையை உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
Advertisement
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.5 கோடி பெற்றது தொடர்பான வழக்கில் மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்தனர்.
Advertisement
இந்நிலையில, ஜவாஹிருல்லா, எஸ்.ஹைதர்அலி, எச்.சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக் மற்றும் நல்ல முகமது களஞ்சியம் ஆகியோரின் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Advertisement