வெளிநாட்டு மாணவர்கள் விரைவில் விசா பெற உதவும் SDS திட்டம் ரத்து - கனடா அரசு நடவடிக்கை!
வெளிநாட்டு மாணவர்கள் விரைவில் விசா பெற உதவும் SDS திட்டத்தை கனடா அரசு ரத்து செய்துள்ளது.
கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டி வருகிறது.இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து கனடா வரும் மாணவர்கள் விரைவில் விசா பெற உதவும் SDS என்ற திட்டத்தை கனடா அரசு ரத்து செய்துள்ளது.
இந்தி திட்டம் 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்தியா, சீனா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் கனேடிய கல்வியைத் தேடும் தகுதியுள்ள பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விரைவானை சேவையை இந்த திட்டம் வழங்கி வருகிறது.
கனடாவில் உள்ள தற்காலிக குடியிருப்பாளர்களின் அளவைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.