வெளிப்படைத் தன்மையை வக்ஃபு சட்டம் உறுதிப்படுத்தும் : முதலமைச்சர் மோகன் யாதவ்
05:22 PM Apr 06, 2025 IST
|
Murugesan M
சொத்து பராமரிப்பில் வெளிப்படைத் தன்மையை வக்ஃபு திருத்த சட்டம் உறுதிப்படுத்தும் என மத்தியப்பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
Advertisement
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃபு சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. வக்ஃபு திருத்தச் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர் மோகன் யாதவ், சொத்து பராமரிப்பில் வெளிப்படைத் தன்மையை வக்ஃபு திருத்த சட்டம் உறுதிப்படுத்தும் என்றும், அதன் பலன்களை இஸ்லாமியச் சமூக மக்களுக்கு விரைவில் பெறுவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
Advertisement
Advertisement