செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வெளி நாட்டில் வேலை இருப்பதாக கூறி ஏமாற்றப்பட்ட இளைஞர் தற்கொலை!

02:06 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருச்சி மாவட்டம் திருவெள்ளறை பகுதியில் வசந்த் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரிடம் ராஜேஷ் கண்ணா என்பவர் போலந்து நாட்டில் தொழில் செய்து வருவதாகவும், அதில் பணிபுரிய ஆட்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய வசந்த் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் 22 லட்ச ரூபாய் பணத்தை பெற்று முத்துச்செல்வன் என்பவரின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

Advertisement

பின்னர் வேலை குறித்து ராஜேஷ் கண்ணாவை தொடர்பு கொண்டு பேசிய போது, முத்துச்செல்வன் 19 லட்ச ரூபாய் பணம் மட்டுமே அனுப்பியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வசந்த் கேட்டதற்கு முத்துச்செல்வன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே போலாந்து நாட்டிற்கு பணிக்கு செல்வதற்காக ராஜேஷ்கண்ணா வழங்கிய விசா போலி என தெரியவந்ததால் பணம் கொடுத்தவர்கள் வசந்திடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த வசந்த் வீடியோ வெளியிட்டு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
A young man who was deceived by claiming that he had a job in a foreign country committed suicide!MAINWork in foreign country
Advertisement