வெள்ள நிவாரண நிதி வழங்காததற்கு எதிர்ப்பு - திண்டிவனம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்!
11:53 AM Dec 12, 2024 IST
|
Murugesan M
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள ஆத்தூர் கிராம மக்கள், வெள்ள நிவாரண நிதி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
இதனால், திண்டிவனம் - மரக்காணம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், போராட்டக்காரர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 30 -ம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது விழுப்புரம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியை அரசு வழங்கி வருகிறது.
Advertisement
Advertisement
Next Article