செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வேங்கைவயல் : மூதாட்டி உடலுக்கு அஞ்சலி செலுத்த அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி!

03:23 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

வேங்கைவயல் கிராமத்தில் உயிரிழந்த முதாட்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில், கடந்த 2022 -ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்க்கத்தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது.

இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மலம் கலந்த வழக்கில், முதல் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட காவலர் முரளி ராஜாவின் பாட்டி கருப்பாயி உயிரிழந்தார்.

Advertisement

அவரது இறுச்சடங்கில் பங்கேற்க வெளியூரில் இருந்து வந்த உறவினர்கள் யாரையும் உள்ளே நுழைய விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியதாக புகார் எழுந்தது. விசிக நிர்வாகிகள் ஒன்று கூட வேண்டும் என சமூகவலைதளங்களில் தகவல் பரவியதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், மூதாட்டி உடலுக்கு அஞ்சலி செலுத்த கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை மற்றும் வி.சி.க. நிர்வாகிகளு்ககு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். மேலும், முக்கிய இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

Advertisement
Tags :
MAINVengaivyal: Permission for political party executives to pay tribute to the old lady!
Advertisement