செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வேங்கைவயல் வழக்கு : தமிழக அரசை கண்டித்து மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!

03:28 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

வேங்கை வயல் வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் சிபிசிஐடி போலீசாரையும், தமிழக அரசையும் கண்டித்து, புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

தமிழகத்தை உலுக்கிய வேங்கை வயல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், குற்றவாளிகள் மூவரும் பாதிக்கப்பட்ட சமூதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சிபிசிஐடி போலீசார் தங்கள் குற்றப்பத்திரிக்கை மூலம் பாதிக்கப்பட்ட சமூதாயத்தினரையே குற்றவாளிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் மற்றும் தமிழக அரசை கண்டித்தும், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து மறு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINprotests against the Tamil Nadu governmentpudukottai vengaivayal caseVengaivayal case.
Advertisement