வேங்கைவயல் வழக்கு : தலைமை செயலாளருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர்!
06:10 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி கடலூரில் விசிகவினர், தலைமை செயலாளருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
வேங்கைவயல் வழக்கில் பாதிக்கபட்ட சமூகத்தை சேர்ந்த சிலரேதான் குற்றவாளி என சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிபிசிஐடியின் இந்த விசாரணை கண்மூடித்தனமாக இருப்பதாக கூறி, வழக்கினை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென கடலூர் மாவட்ட விசிகவினர் தலைமை செயலாளருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டியவாறு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
Advertisement
Advertisement