செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வேங்கைவயல் வழக்கை, சிபிஐயிடம் ஒப்படைக்க வலியுறுத்தி விசிக உண்ணாவிரதம் - பலத்த போலீஸ் பாதுகாப்பு!

02:30 PM Jan 25, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

வேங்கைவயல் வழக்கை, சிபிஐயிடம் ஒப்படைக்க வலியுறுத்தி விசிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடர்வதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் யார் என்பது தெரியாததால், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனால் அதிர்ச்சியடைந்த பட்டியலின மக்கள், வேங்கை வயல் கிராமத்திற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், வேங்கை வயல் சம்பவத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 3 நபர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்றும், இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி விசிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

Advertisement

இதனால், 9 சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே வேங்கை வயல் கிராமத்திற்குள் நுழைய முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement
Tags :
FEATUREDHunger StrikeMAINpolice deployedpudukottaiVengai Vayal case
Advertisement