வேங்கை வயல் : பொதுமக்கள் 5 வது நாளாக போராட்டம்!
12:37 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் பொதுமக்கள் 5ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
வேங்கை வயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த 3 பேர் தான் குற்றவாளி என சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதற்கு விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வேங்கை வயல் மக்கள் கருப்பு கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வேங்கை வயல் கிராமத்திற்குள் வெளி நபர்கள் செல்ல காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், பொதுமக்கள் 5வது நாளாக கருப்பு மாஸ்க் அணிந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
Advertisement
Advertisement