வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது : விசிக சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல்!
வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என விசிக சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேங்கை வயல் வழக்கில் பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த 3 பேர் தான் குற்றவாளி என சிபிசிஐடி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என அக்கட்சி சார்பில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புசட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாகவும், சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புகார் தாரரை விசாரிக்காமல் குற்றப்பத்திரிகை எவ்வாறு தாக்கல் செய்யப்பட்டது என்றும் அந்த மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.