வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கூடு கட்டிய தேனீக்கள்!
04:55 PM Mar 21, 2025 IST
|
Murugesan M
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கட்டப்பட்டிருந்த தேன் கூட்டை தீயணைப்பு வீரர்கள் அகற்றியதால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.
Advertisement
சத்துவாச்சாரி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரு கட்டடங்களில் பல்வேறு துறையின் அலுவலகங்கள் செயல்படுகின்றன. அங்குள்ள உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்திற்குள் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது.
இதனால் அங்கு பணியாற்ற முடியாமல் அதிகாரிகள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், தேனீக்களுக்குப் பயந்து சில அலுவலர்கள் அலுவலகத்தின் உள்ளே செல்லவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தேன் கூட்டை பாதுகாப்பாக அகற்றினர்.
Advertisement
Advertisement