For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும் - உச்ச நீதிமன்றம் கேள்வி!

10:43 AM Dec 10, 2024 IST | Murugesan M
வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும்   உச்ச நீதிமன்றம் கேள்வி

வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த இடர்கள் மற்றும் அவர்களுக்கான நிவாரணம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement

இந்த வழக்கில் ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் சூர்ய கந்த் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொரோனா பாதிப்பை தொடர்ந்து 81 கோடி மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

அப்போது தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன், ரேஷன் கார்டு இல்லையென்றாலும் இ-ஸ்ராம் தளத்தில் பதிவு செய்த அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும்? எனவும் வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

Advertisement
Tags :
Advertisement