செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நடிகர் ஷிஹான் ஹுசைனி மறைவு - அண்ணாமலை இரங்கல்!

11:36 AM Mar 25, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், உலக அளவில் புகழ்பெற்ற தற்காப்புக் கலைகள் பயிற்சியாளரும், வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி காலமான செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய வில்வித்தை கழகத்தின் தேசியத் துணைத் தலைவராகச் சிறப்பாக பணியாற்றியவர். நவீன வில்வித்தை பயிற்சியின் முன்னோடியாக விளங்கியவர். சிற்பக் கலையிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

தனது மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், இறுதி வரை தைரியமாக, தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்ட ஷிஹான் ஹூசைனி அவர்கள் மறைவு, இந்திய விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு என அவர் கூறியுள்ளார்.

அவரது உறவினர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
actor Shihan Hussaini passed awayarchery coachFEATUREDMAINTamil Nadu BJP State President Annamalai
Advertisement