செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஸ்டாலினின் அலங்கோல ஆட்சியில், பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

07:50 PM Apr 15, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்குமளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பது பெரும் ஆபத்தானது எனப் பாஜக மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

தடுக்க வந்த ஆசியரையும் அம்மாணவன் தாக்கியுள்ளதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமொரு கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் சாதிய ரீதியான தாக்குதல் ஆகியவை வரிசை கட்டிக் கொண்டிருக்கும் ஸ்டாலினின் அலங்கோல ஆட்சியில், பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்குமளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பது பெரும் ஆபத்தானது என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அதுவும், “பென்சில் கேட்ட தகராறில் தாக்குதல் நடந்துள்ளது” எனக் கூறுகிறார் நெல்லை உதவி காவல் ஆணையர். ஆனால், பென்சிலுக்காக பள்ளிக்குள் அரிவாளை மறைத்து எடுத்துச் சென்று உடன் படிக்கும் மாணவனைத் தாக்குமளவிற்கு நமது பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை முறையாக ஆராய்ந்து அதற்கு தக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு, இனியும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழாமலிருக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் முதல்வரை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAINUnder Stalin's chaotic regimeeven school children had deadly weapons in their hands: Nayinar Nagendran allegesநயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டுஸ்டாலினின் அலங்கோல ஆட்சி
Advertisement