செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பக்கவாதத்தால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - காரணம் என்ன?

03:04 PM Sep 01, 2024 IST | Murugesan M

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இளம்வயதினர் அதிகளவில் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

இதயத் துடிப்பில் ஏற்படும் குறைபாடுகளால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு உடல் உறுப்புகளின் செயற்பாடுகள் தடைப்படுவதே ஸ்ட்ரோக் எனப்படுகிறது.

இரத்த உறைவு மற்றும் இரத்த கசிவு என இரண்டு வகையான ஸ்ட்ரோக் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

2023ம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உடன் இணைந்து Lancet journal லான்செட் ஜர்னல் நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தரும் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த ஆய்வறிக்கை, 2050ம் ஆண்டுக்குள் இந்தியா உட்பட வளரும் நாடுகளில் சுமார் ஒரு கோடி பேர் ஸ்ட்ரோக் எனப்படும் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கிறது.

தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்தியாவில்தான் அதிக பக்கவாத நோயாளிகள் உள்ளனர். இந்தியாவில் இறப்புக்கான மூன்றாவது முக்கிய காரணமாகவும் இந்த ஸ்ட்ரோக் இருக்கிறது. மேலும் உடல் உறுப்புக்கள் செயலிழப்புக்கும் இயலாமைக்கும் ஆறாவது முக்கிய காரணமாகவும்  ஸ்ட்ரோக் உள்ளது.

2022ம் ஆண்டு Boehringer Ingelheim India என்ற மருந்து நிறுவனத்தால், இந்தியாவில் உள்ள 12 முக்கிய நகரங்களில் 4,742 இந்தியர்களிடம் ஆன்லைன் சர்வே நடத்தப் பட்டது.

அதில், நான்கு இந்தியர்களில் ஒருவருக்குக் கீழ் பக்கவாதம் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியும் என்றும், அவர்களில் 10 சதவிகிதத்தினர் மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர் என்றும் தெரிய வந்திருக்கிறது.

ஸ்ட்ரோக்குக்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தும், முறையான மருத்துவ சிகிச்சை எடுக்காவிட்டால், அடுத்த முறை ஸ்ட்ரோக் வந்தால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஸ்ட்ரோக் ஏற்பட்டு 4 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் சென்றாலும் கூட மூளையில் இரத்த கசிவு இல்லை என்றால் தான் முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நவீன மயமான மருத்துவ வளர்ச்சி , சிறந்த சிகிச்சை முறைகள் இருந்தாலும் கூட , ஸ்ட்ரோக் வராமல் தற்காத்து கொள்வதே எப்போதும் ஆரோக்கிய வாழ்வுக்கு வழியாகும்.

ஸ்ட்ரோக் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றால், எளிமையான உடற்பயிற்சி, நல்ல உணவு முறைகள், ஆரோக்கியமான உறவுகள் மற்றும் மன அமைதி ஆகிய நான்கும் முக்கியம் என்கிறார்கள்.

மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஊட்டச் சத்துக்களை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பதும் மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.

Advertisement
Tags :
blood flowdefects in the heartbeathemorrhagicIndiaMAINstroke
Advertisement
Next Article