செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்!

11:09 AM Nov 19, 2024 IST | Murugesan M

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இஸ்ரோவின் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

Advertisement

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் ஏராளமான செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வந்தன. அதேவேளை, தனியார் நிறுவனங்களின் ராக்கெட்டுகள் மூலமும் செயற்கைக்கோள்களை ஏவும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது. அந்த வகையில், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கிஸ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ராக்கெட் மூலம் இஸ்ரோவின் செயற்கைக்கோள் நேற்று விண்ணில் ஏவப்பட்டது.

Advertisement

அமெரிக்காவின் கேப் கென்வரெல் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் தகவல்தொடர்பு செயற்கைக்கோளான 4 ஆயிரத்து 700 கிலோ எடையுள்ள ஜிசாட்-20 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோவுக்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே வர்த்தக ரீதியில் முதன் முறையாக செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
FEATUREDISROISRO satellite launched by SpaceX rocket!MAIN
Advertisement
Next Article