செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஸ்ரீரங்கம் ரவுடி அன்புராஜ் கொலை வழக்கு - 6 பேர் கைது!

11:55 AM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

ஸ்ரீரங்கத்தில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள மூலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அன்புராஜ். காவல்துறையின் 'C' பிரிவு ரவுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர் மீது, பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நேற்று தெப்பக்குளம் பகுதியிலுள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு சென்ற அன்புராஜை, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது.

Advertisement

தகவல் அறிந்து சென்ற போலீசார், அன்புராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், இளைஞர் உட்பட 6 பேரை அகைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், 3 அரிவாள்கள் ஆகியவற்றை கைப்பற்றி  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Tags :
6 persons arrestedMAINMoolathoperowdy anbu raj murderdsrirangam
Advertisement