ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் : ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம்!
04:36 PM Apr 14, 2025 IST
|
Murugesan M
கோவை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு, ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
Advertisement
தமிழ் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கோவை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசித்தனர்.
அம்மனுக்குச் சாத்தப்பட்ட ரூபாய் நோட்டுகள், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மூலம் கோயிலுக்கு வழங்கப்பட்டதாகவும், சிறப்புப் பூஜைக்குப் பின்னர் ரூபாய் நோட்டுகள் அந்தந்த தொழிலதிபர்களிடமே திருப்பி அளிக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement