பணயக்கைதிகளை விடுதலை செய்யும் ஹமாஸ் : இஸ்ரேல் தகவல்!
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பணயக்கைதிகளை ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் விடுவிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் தெரிவித்துள்ளது.
Advertisement
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 15 மாதங்களாக நடைபெற்று வந்த காஸா போர் முடிவுக்கு வந்துள்ளது.
காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான போராளிக் குழுவான ஹமாஸ் உடனான ஒப்பந்தத்திற்கு இறுதி ஒப்புதல் வழங்க இஸ்ரேலிய அமைச்சரவை கூட்டப்பட்டது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்தது.
கூட்டத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தி உள்ளது என்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேச்சுவார்த்தைக் குழுவால் தெரிவிக்கப்பட்டது என்று அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.