ஹரியானா : வெடித்துச் சிதறிய லாரி - உயிர் தப்பிய தொழிலாளர்கள்!
06:14 PM Mar 25, 2025 IST
|
Murugesan M
ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியில் CNG பொருத்தப்பட்ட லாரி திடீரென வெடித்துச் சிதறியது.
Advertisement
பஞ்சாபிலிருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஷாம்லிக் பகுதிக்கு 15க்கும் மேற்பட்ட செங்கல்சூளை தொழிலாளர்கள் CNG பொருத்தப்பட்ட லாரியில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது பானிபட் சுங்கச்சாவடியை அடைந்தபோது,லாரியில் இருந்து புகை வெளியேறியது. இதனை அறிந்த ஓட்டுநர் அவசரமாக கீழே இறங்கினார்.
Advertisement
மேலும், லாரியில் இருந்த தொழிலாளர்களும் கீழே குதித்து உயிர் தப்பினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
Advertisement