ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு - 4 பேர் பலி!
08:30 PM Dec 25, 2024 IST | Murugesan M
ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவால் 4 பேர் உயிரிழந்தனர்.
ஹிமாச்சலப்பிரதேசத்தின் மணாலி, சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் காணும் இடமெல்லாம் வெள்ளை போர்வை போர்த்தியதைப் போல ரம்மியமாக காட்சியளித்ததால், பிரபலமான இடங்களை நோக்கி சுற்றுலாப் பயணிகள் படையெடுத்தனர்.
Advertisement
200-க்கும் மேற்பட்ட சாலைகளில் பனி மூடியதன் காரணமாக போக்குவரத்து முடங்கியது. பனி விழுந்து 356 டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்ததால் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது. மேலும், பனியின் காரணமாக சறுக்கி விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Advertisement
Advertisement