செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஹெச். ராஜாவுக்கு கொலை மிரட்டல் - தமிழக பாஜக சார்பில் டிஜிபியிடம் புகார்!

05:54 PM Nov 22, 2024 IST | Murugesan M

பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா கொலை மிரட்டல் விடுத்த  விடுத்த மனித நேய மக்கள் கட்சி மாநில நிர்வாகி மீது தமிழக டிஜிபியிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

Advertisement

கடந்த 15 ஆம் தேதி பம்மல், இரட்டைப் பிள்ளையார் கோவில் அருகே நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டத்தில் பேசிய  மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் ஹச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

இந்நிலையில்,  தாம்பரம் யாகூப் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்ககோரி தமிழக பாஜக மாநில துணை தலைவர்கள் திரு கரூ. நாகராஜன் , பால்கனகராஜ் மற்றும் பாஜக நிர்வாகிகள் தமிழ்நாடு  காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவலை சந்தித்து புகார்  அளித்தனர்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரு நாகராஜன்,  யாக்கூப்பை உடனடியாக  கைது செய்ய வேண்டும் என டிஜிபியிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்ததாக தெரிவித்தார்.

அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும்,  முதல்வர் முக ஸ்டாலின் சொல்லும் அமைதியான தமிழ்நாடு இது தானா என்றும் கரு.நாகராஜன் கேள்வி எழுப்பினார்.

 

Advertisement
Tags :
BalkanagarajFEATUREDh rajaKaru.NagarajanMAINManitha Neya Makkal KatchiTambaram Yakubtamil Nadu DGP
Advertisement
Next Article