ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி- கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் பாஜக புகார்!
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் மீது நடவடிக்கை கோரி கோயம்முத்தூர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏபி.முருகானந்தம் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில், கடந்த 15 ஆம் தேதி பம்மல், இரட்டைப் பிள்ளையார் கோவில் அருகே நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டத்தில் பேசிய மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் ஹச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
எனவே விழாவிற்கு தலைமையேற்ற மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜிவாஹருல்லா, , மதக் கலவரைத்தை தூண்டும் வகையில் வன்மத்துடன் திட்டமிட்டு பேசிய தாம்பரம் யாகூப் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏபி.முருகானந்தம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏ.பி. முருகானந்தம், கடந்த 15ஆம் தேதி எச். ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இதுவரை சம்பந்தப்பட்டவரை கைது செய்யாதது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.