செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அவதூறு வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பாஜக துணை நிற்கும் - அண்ணாமலை உறுதி!

02:00 PM Dec 02, 2024 IST | Murugesan M

ஹெச்.ராஜா வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

அரசியல் உயர் கல்வி பயில லண்டன் சென்றிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மூன்று மாதங்களுக்குப் பிறகு கமலாலயம் சென்றார். அவருக்கு மேளதாளம் முழங்க பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பேசிய அவர், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய  டெல்டா மாவட்டங்களுக்கு பாஜக சார்பில் குழு அனுப்பப்படவுள்ளதாக தெரிவித்தார்

Advertisement

நாளை முதல் விழுப்புரம், மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தாம்  செல்ல உள்ளதாகவும் கூறினார்.

10 ஆண்டுகளில் பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை 8 மடங்கு அதிகத்துள்ளதாகவும்,  தமிழகத்தில் கிளை அளவில் பாஜக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருவதாகவும்  அண்ணாமலை தெரிவித்தார். 2026 தேர்தல் - வாழ்வா, சாவா என்ற தேர்தலாக அமையும்  என்றும் அவர் கூறினார்.

ஹெச்.ராஜா வழக்கில் பாஜக சார்பில் மேல்முறையீடு செய்யும் அவருக்கு என்றும் கட்சி துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டார். மேல் முறையீட்டில் ஹெச்.ராஜாவிற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

Advertisement
Tags :
annamalaih rajatamilnadu bjp presidentBJP State President AnnamalaiKamalalayam.H. Raja case.FEATUREDMAINChennai
Advertisement
Next Article